தமிழகத்தில் புதிய கொரோனா வைரஸின் தாக்கமா?? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!!

0
minister vijayabasker
minister vijayabasker

லண்டனிலிருந்து கடந்த பத்து நாட்களில் சென்னை வந்த 1,088 நபர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்தது அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸ்:

கடந்த சில தினங்களாக இங்கிலாந்தில் பரவிவரும் உருமாற்றம் அடைந்த வீரியம் மிக்க கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்துடனான பயணிகள் போக்குவரத்தை பல்வேறு நாடுகளும் தடை செய்து வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கண் சிகிச்சை முகாமை ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போது கடந்த பத்து தினங்களாக லண்டனிலிருந்து இந்தியா வந்த 1,088 நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுள் ஒருவருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, முடிவுகள் வந்தால் தான் அது என்ன மாதிரியான வைரஸ் என தெரியும் என்று கூறினார்.

மக்களுக்கு ஹாப்பி நியூஸ் சொன்ன தங்கம்!!

மேலும் அவர் கூறுகையில், புதிய வைரஸ் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும், மத்திய , மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், பயணிகள் மீதான கண்காணிப்பு தொடரும். அதுமட்டுமின்றி மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களை தடை செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here