அன்டார்டிகாவையும் விட்டு வைக்காத கொரோனா – 36 பேருக்கு பாதிப்பு!!

0
corona testing kit
corona testing kit

அனைத்து கண்டங்களையும் தாக்கிய கொரோனா நோய் தொற்று அண்டார்டிகா கண்டத்தில் இருப்பவர்களை மட்டும் தாக்காமல் இருந்தது. தற்போது அங்கு 36 பேருக்கு முதன் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம்:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா பரவியது. இது வேகமாக அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இன்று வரை அந்த வைரஸின் தாக்கம் மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இந்த நோய் தாக்கம் ஒரு ஆண்டுக்கும் மேலாக அனைத்து நாடுகளை அச்சுறுத்தி வந்தாலும், அண்டார்டிகா கண்டத்தை மட்டும் தாக்காமல் இருந்து வந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால் தற்போது சிலி ஆராய்ச்சி தளத்தில் உள்ள 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெனரல் பெர்னார்டோ ஓ’ஹிகின்ஸ் ரிக்கெல்ம் ஆராய்ச்சி தளத்தில் இருந்து கொரோனா பரவியதாக தெரிவிக்கின்றனர். தற்போது அங்கு பாதிக்கப்பட்ட அனைவரும் 14 நாட்கள் தங்களை தனிமைபடுத்தி கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய கொரோனா வைரஸின் தாக்கமா?? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 36 பேரில் 26 பேர் மட்டுமே ஆராய்ச்சி தளத்தை சேர்ந்தவர்கள் என்றும் மற்ற அனைவரும் அங்கு பணியாளர்களாக இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் தொலைவில் யாரும் இல்லாத பகுதியாக இருக்கும் அண்டார்டிகா கண்டத்தில் எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here