
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நாள்தோறும் ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மீனாவின் தங்கை திருமணத்திற்கு மூர்த்தி குடும்பத்தினர் அனைவரும் மண்டபத்திற்கு வந்துள்ளனர். மேலும் திருமண வேலைகளை பொறுப்பாக இருந்து பார்த்து கொள்ளும் ஜீவா போன தடவை நிச்சயதார்த்தத்தில் தன் குடும்பத்தாரை ஜனார்த்தனன் அசிங்கப்படுத்தியது போல் இந்த முறை எதுவும் நடந்திட கூடாது என ஜீவா பயந்து வருகிறார். முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில் மீனாவிடம், மாப்பிள்ளை மற்றும் அவர் குடும்பத்தாரை மேடைக்கு வர சொல்லுமா என ஜனார்தனன் கூறுகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் ஜீவா நினைத்தது போல் இல்லாமல் இந்த ஜனார்த்தனன் மூர்த்தி குடும்பத்தினரை மதிப்பாக நடத்துகிறார். இதன் பிறகு நல்லபடியாக திருமணம் நடந்து முடிகிறது. அதன் பின் 2 மொய் கவர்களை கண்ணனிடம் கொடுத்த மூர்த்தி, செய்முறை செய்து வரும்படி சொல்கிறார். மற்றொருபக்கம் முல்லையிடம் அவரது அம்மா, நீங்க எவ்ளோ மொய் பணம் செய்ய போகிறீர்கள் என கேட்க, அதற்கு அவர் 5000 என சொல்கிறார். இதை விட கொஞ்சம் கூட மொய் செய்யும்படி கூறுகிறார்.
யோவ்.., குணசேகரா.., சரியான விஷம் தான் நீ.., சதியால் வீட்டை விட்டு துரத்தப்படும் ஜனனி!!
அதற்கு அவர் வேண்டாம், மூர்த்தி மாமா வேற பெரிய தொகை செய்கிறார். இந்த செய்முறையையே அக்கா மாமாவுக்கு தெரியாமல் தான் செய்கிறேன் என சொல்லிவிடுகிறார். இதன் பிறகு முல்லையின் அப்பாவிடம், பார்வதி கூடிய சீக்கிரத்தில் முல்லைக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு செய்து நம் வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட வேண்டும் என கூறுகிறார். இந்த சீரியலின் இப்படியான காட்சிகளை பார்க்கும் போது இனி மூர்த்தி குடும்பத்துக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.