
நடிகர் சிம்பு நடித்த பத்து தல படத்தின் ட்ரைலர் வீடியோ இன்று வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பத்து தல:
‘மாநாடு’ படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் சிம்பு தொடர்ந்து தனித்துவமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது கேங் ஸ்டர் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் தான் பத்து தல. மணல் மாஃபியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், சிம்பு AGR என்கிற கேரக்டரில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான தங்களின் எதிர்பார்ப்பை இணையத்தில் அடிக்கடி வெளிப்படுத்தி வருகின்றனர். அதுபோக இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடக்க இருக்கிறது.
இந்த நிலையில் பத்து தல படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சிம்பு நடித்த பத்து தல படத்தின் ட்ரைலர் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான போஸ்டரை வெளியிட்டுள்ளது. தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
A Thunderous #PathuThalaTrailer on the way tonight at 10 p.m. #Atman @SilambarasanTR_ @Gautham_Karthik
An @arrahman musical
🎬 @nameis_krishnaProduced by @StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada#PathuThala#PathuThalaAudioLaunch#SilambarasanTR #AGR pic.twitter.com/olodaemQXR
— Studio Green (@StudioGreen2) March 18, 2023