யோவ்.., குணசேகரா.., சரியான விஷம் தான் நீ.., சதியால் வீட்டை விட்டு துரத்தப்படும் ஜனனி!!

0

எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது ஆதிரையின் திருமண விவகாரம் தான் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆதிரைக்கும், அருணுக்கும் திருமணம் செய்து வைக்க அப்பத்தா, ஜனனி, 3 மருமகள்கள் போராடி வருகின்றனர். மேலும் இப்பொழுது பேராபத்து ஒன்று நிகழவுள்ளது.

அதாவது, குணசேகரன், எதோ பெரிய திட்டத்தில் உள்ளார். அதாவது, ஜனனியை வீட்டை விட்டு துரத்த வேண்டும். அதோடு, 40% ஷேர் தன் பெயரில் மாற்ற வேண்டும் என்று சூழ்ச்சி செய்து வருகிறார். கரிகாலன் சொத்தையும் கைப்பற்ற ஆசை படுகிறார் குணசேகரன்.

இப்படி இருக்க ஆதிரையின் காதல் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக 40% ஷேர் தன் பெயரில் எழுதி தர வேண்டும் என்று கண்டிஷனை போட்டு விட்டார் குணசேகரன். இதற்கு அப்பத்தா என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.

இப்படி இருக்க இப்பொழுது ஜனனியை வீட்டை விட்டு துரத்த வாய்ப்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது ஆதிரையின் திருமண விஷயத்தை வைத்தே தனக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சுமூகமாக முடிக்க திட்டம் போட்டு விட்டார். இதனால் ஜனனியை வெளியே துரத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here