பிரதமருக்கு எதிரான ட்வீட் – நடிகை ஓவியா மீது சைபர் கிரைமில் புகார்!!

0

பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு பல திட்டங்களை துவக்கி வைப்பதற்காக வருகை தந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகை, ஓவியா மோடியின் வருகையை எதிர்த்து #GoBackModi என்று ஹேஷ்டேக்கை பதிவு செய்தார். தற்போது இதற்கு பாஜக.,வினர் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர்.

ஓவியா:

நேற்று பல்லாயிரக்கணக்கான மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைப்பதற்காக நாட்டின் பிரதமர் மோடி காலை 10.30 மணி அளவில் சென்னை வந்தார். இங்கு வந்த அவர் பல திட்டங்களை துவக்கி வைத்து மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி சென்றார். அவர் நேற்று சென்னை வந்ததும் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு சென்றார். அங்கு சென்ற அவர் சுமார் ரூ.8,126 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்பின்பு அவர் கேரளா சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் ட்விட்டரில் #GoBackModi என்னும் ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வந்தது. மேலும் மோடியின் சென்னை வருகையை எதிர்த்து பலரும் ட்வீட் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த #GoBackModi ஹேஷ்டேக்கை முதலாவதாக நடிகை ஓவியா துவக்கி வைத்தார். அவர் எந்த பதிவையும் குறிப்பிடாமல் வெறுமையாக #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்தார்.

தற்கொலை எண்ணம் வருகிறது – மனம் திறந்த மீரா மிதுன்!!

இதன் மூலம் அவர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது இதனால் ஆத்திரமடைந்த தமிழக பாஜக ஐடி விங், நடிகை ஓவியா மீது சிபிசிஐடி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, அமைதி நிலையை கெடுக்கும் படியும் இறையாண்மைக்கு எதிராக ஓவியா செயல்படுகிறார் என்று புகார் அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here