பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் – வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!

0

இன்றைய நிலவப்படி பெட்ரோல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. மேலும் தற்போது மத்திய அரசு பெட்ரோலில் எத்தனாலை கலப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இதுகுறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

பெட்ரோல்:

கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் விலை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தற்போது இன்றைய நிலவரப்படி இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டியது. பெட்ரோல் குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் மத்திய அரசு பெட்ரோல் நிறுவனங்களுக்கு பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பெட்ரோல் நிறுவனங்கள் தற்போது பெட்ரோலுடன் 10 சதவீதம் எத்தனாலை கலந்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எத்தனாலுடன் தண்ணீர் சேர்ந்தால் வாகனத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே இதுகுறித்து வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோலுடன் தற்போது எத்தனால் கலந்து வருவதால், வாகன ஓட்டிகள் தனது வாகனங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை பார்த்து கொள்ளவும். மழையினால் பெட்ரோல் டேங்கிற்குள் தண்ணீர் போய்விடலாம் அல்லது வண்டியை கழுவும் பொழுது தண்ணீர் உள்ளே சென்று விடலாம்.

ஜீ தமிழ் சீரியலில் வனிதா விஜயகுமார் – குஷியில் ரசிகர்கள்!!

அப்படி சென்றால் தண்ணீருடன் எத்தனால் சேரும் பொழுது வண்டி பழுதாக வாய்ப்புள்ளது அல்லது வண்டி இயக்க கடினமாகும் அல்லது ஜெர்க் ஆகும். எனவே வாகன ஓட்டிகள் கவனமாக வண்டியை பரமரிக்க வேண்டும். அப்படி எதுவும் பழுதானால் அதற்கு வாகன ஓட்டிகள் தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here