ஜீ தமிழ் சீரியலில் வனிதா விஜயகுமார் – குஷியில் ரசிகர்கள்!!

0

பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் தற்போது பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஒரு சில தொடர்களிலும் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா தொடரில் நடித்ததை தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் தொடரிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வனிதா விஜயகுமார்:

நடிகை வனிதா விஜயகுமார் எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். நெட்டிசன்களுக்கு தொடர்ந்து கன்டென்ட் கொடுத்து வரும் இவர் நீண்ட பிரேக்குக்கு பிறகு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்று பிரபலமடைந்தார். அதன் பிறகு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜ்களில் ஒருவராக பங்கேற்ற அவர் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

உச்சத்தை தொடும் சின்ன வெங்காயம் விலை – மக்கள் கவலை!!

மேலும் சன் டிவியின் பிரபல தொடரான சந்திரலேகாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் எனும் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகை அம்பிகா, நடிகர் அமீத் ஆகியோர் நடிக்கும் அந்த தொடரில் கௌரவ வேடத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவித்த வனிதா, அந்த தொடரின் படப்பிடிப்பில் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வனிதாவின் இந்த வருகை ஜீ தமிழ் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here