கிடுகிடுவென உயரும் ‘கேஸ் சிலிண்டர் விலை’ – காரணம் இதுதான்!!

0

கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால், சமையல் எரிவாயுவின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. மாதத்திற்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்யப்படும் சமையல் எரிவாயு கடந்த டிசம்பர் மாதம் மட்டும் இருமுறை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒரே மாதத்தில் 75 ரூபாய் அதிகரித்து தற்போது எரிவாயுவின் விலை ரூ.785க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சமையல் எரிவாயுவின் விலை Import Parity Price என்ற முறையில், சர்வதேச அளவில் சமையல் எரிவாயுவின் விலையை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. சவூதி அரம்கோ நிறுவனத்தின் விலை தான் எல்பிஜியின் நிரந்தர விலையாக இருக்கிறது. மூலப்பொருள், போக்குவரத்து கட்டணம், துறைமுக கட்டணம், கஸ்டம்ஸ் வரி உள்ளிட்ட தொகைகளை சேர்த்து எல்பிஜியின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டாலரில் நிர்ணயம் செய்யப்படும் இந்த விலை பின்பு ரூபாயாக மாற்றப்படுகிறது. இதன் பின்பு உள்நாட்டு போக்குவரத்து, சிலிண்டரில் சமையல் எரிவாயுவை நிரப்பும் கட்டணம், மார்க்கெட்டிங் கட்டணம், லாபம், டீலர் கட்டணம், ஜிஎஸ்டி இவை எல்லாவற்றின் கட்டணமும் சேர்ந்து மொத்தமாக சமையல் எரிவாயு விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு மெட்ரிக் டன் சமையல் எரிவாயு 230 டாலர் என்ற விலையில் இருந்தது. தற்போது இந்த விலை 450 டாலராக இருக்கிறது. இந்தியாவிற்கு தேவையான எரிவாயுவில் பாதியளவு மட்டுமே மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

மீதியான எரிவாயு உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. இதனால் எப்படி ஒட்டுமொத்த சில்லறை விற்பனை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது கேள்விக்குறியாகிறது. நமது நாட்டின் அரசாங்கத்தை பொறுத்தவரை, கச்சா எண்ணெயின் விலை குறைந்தால், வரியை சற்று அதிகமாக விதித்து வருமானத்தை அதிகரிக்கலாம். கச்சா எண்ணெயின் விலை சற்று அதிகரித்தாலும், ஏற்கனவே உள்ள வரிகள் மூலம் வருமானம் கிடைக்கும். ஆனால் ஏற்கனவே மக்களிடையே உள்ள நிதி நெருக்கடி மற்றும் பணப்பற்றாக்குறையில், சிலிண்டரின் விலை அதிகரித்து மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்சத்தை தொடும் சின்ன வெங்காயம் விலை – மக்கள் கவலை!!

மாதத்துக்கு ஒருமுறை உயர்ந்து வந்த சிலிண்டரின் விலை கடந்த டிசம்பர் மாதம் மட்டும் இருமுறை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சர்வதேச சந்தை மற்றும் ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நிலையில், வாரம் ஒருமுறை கச்சா எண்ணெய் விலையை மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகிறது. இதுகுறித்து மக்கள் கருத்து தெரிவிக்கும் போது, சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலையில் இத்தகைய மாற்றம் நடந்தது. தற்போது பெட்ரோல் விலை உயர்ந்து வந்தாலும் அதைப்பற்றி நாம் சிந்திப்பதில்லை. அதுபோல எரிவாயுவின் விலை உயர்ந்து வந்தாலும் நாம் அதே நிலையில் தான் இருப்போம் என கவலை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here