ஜஸ்பே மூலம் கிரெடிட் கார்டு தகவல்கள் திருட்டு – சைபர் கிரைம் எச்சரிக்கை!!

0

ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப் பட்டவர்களின் டேபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் விவரங்கள் தற்போது திருடப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஆன்லைன் பண பரிவர்த்தனை:

தற்போதைய காலங்களில் அனைத்து மக்களும் ஆன்லைன் மூலம் பணபரிவர்தனையை மேற்கொண்டு வருகின்றனர். ஹோட்டல், மால், மருந்தகம் போன்ற அனைத்து இடங்களிலும் தற்போது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்த கொரோனா காலங்களில் ஆன்லைன் பணபரிவர்தனையை மேற்கொள்வதே சிறந்தது என்றும் கூறுகின்றனர். மேலும் தற்போது வரை மக்கள் அனைவரும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது என்று நினைத்து தான் இதனை உபயோகப்படுத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் தற்போது அனைவரும் அதிர்ந்து போகும் வகையில் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் ஓர் தகவலை வெளியிட்டுள்ளனர். அது என்னவென்றால் அமேசான், ஸ்விக்கி, மேக் மை ட்ரிப் போன்ற தளங்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்வதற்கு ஜஸ்பே மிகவும் உதவியாக உள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தங்களது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் விவரங்களை முழுவதும் கொடுத்து பணபரிவர்தனையை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

பெங்களூருவை சேர்ந்த ஜஸ்பே மூலம் இந்த கார்டுகளின் தகவல் அனைத்தும் திருடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த தகவல்கள் அனைத்தும் இணையத்தின் இருண்ட பக்கம் அதாவது ஹாக்கர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்கள். கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இதில் சுமார் 10 கோடி மக்களின் வங்கி விவரங்களை அவர்கள் திருடியுள்ளார்கள் எனவும், மேலும் இந்த விவரங்களை வைத்து கொண்டு அவர்கள் பணமோசடியில் ஈடுபடலாம் என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது ஆன்லைன் பணபரிவர்தனையை மேக்கொள்ள மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here