கொரோனாவை விட மோசமான ‘X நோய்’ பரவல் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

0

தற்போது உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா தொற்றை விட மிகவும் ஆபத்தான புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இந்த நோய் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதன்முதலில் காணப்பட்டது. மேலும் இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவுகிறது என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

எக்ஸ் நோய்:

1976 ஆம் ஆண்டில் எபோலா வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் ஜீன்-ஜாக் மியூம்பே தம்பூ தற்போது கொரோனாவை விட கொடூரமான எக்ஸ் நோய் (Disease X) குறித்து ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். அவர் கூறுகையில், காலம் காலமாக விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவல் ஏற்பட்டு வருகிறது. தற்போது அதிக காய்ச்சல் மற்றும் இரத்தப்போக்குக்கு ஆகியவற்றிற்காக சிகிச்சை பெற்ற ஒருவருக்கு இந்த புதிய தொற்றுநோய் கண்டறியப்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த எக்ஸ் நோய் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்து உள்ளார். இதன் முதன் நோயாளி ஆப்ரிக்க நாடான காங்கோவில் கண்டறியப்பட்டு உள்ளார். அதிகளவு அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்களின் பிறப்பிடமாக ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல காடுகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனவரியில் இந்த 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – மேலாண் இயக்குனர் அறிவிப்பு!!

காடுகள் அழிப்பு, விலங்குகளின் வாழ்விட அழிவு மற்றும் வனவிலங்கு வர்த்தகம் ஆகியவை நோய் பரவுவதற்கு வழிவகுக்கிறது என்று ஒரு குழு எச்சரித்து உள்ளது. இந்நிலையில் இந்த புதிய எக்ஸ் நோய் குறித்து உலக சுகாதார அமைப்பு சில தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதில் கொரோனா தொற்றுநோயை விட ஆபத்தான ஒரு தொற்றுநோய் உலகைத் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. மேலும் வேகமாக பரவக்கூடிய ஆற்றல் கொண்ட இந்த வைரஸுக்கு நோய் எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மாநில பேரிடராக ‘பறவை காய்ச்சலை’ அறிவித்த கேரள அரசு – 48,000 பறவைகளை கொல்ல முடிவு!!

மேலும் இந்த் வைரஸ் வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. கொரோனா வைரஸைப் போலவே இந்த நோயின் பரவலும் 50-90 சதவிகிதம் வரை அதிகமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here