இந்தியாவில் அறிமுகமாகும் Mi 10i ஸ்மார்ட்போன் – விற்பனை தேதி அறிவிப்பு!!

0

சியோமி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான Mi10i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி, விலை மற்றும் அதனுடைய அம்சங்களை சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சியோமி:

அடுத்தடுத்து புதுஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் சியோமி நிறுவனம் ஆர்வம் செலுத்தி வருகிறது. தற்போது இதனுடைய லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான Mi 10i ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம் செய்ய சியோமி நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பெயரில் உள்ள i இந்தியாவை குறிக்கும் என்றும் இந்த ஸ்மார்ட் போனில் இந்தியர்களுக்கென தனி அம்ஸங்கள் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் லேட்டஸ்டாக 4 மாடல் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் Mi 10i, Mi 10Pro, Mi 10Lite மற்றும் Mi 10 Lite Zoom edition என்பதாகும். தற்போது இதன் வரிசையில் Mi 10i இடம் பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா, மி காம், மி ஸ்டூடியோ ஸ்டோர்ஸ் மற்றும் மி ஹோம் ஸ்டோர்ஸ் மூலம் வரும் 7ம் தேதி அன்று மதியம் 12 மணி அளவில் விற்பனைக்கு வெளிவரும் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள சுமார் 10,000 சில்லறை கடைகளில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Mi 10i கேமரா அம்சங்கள்:

இந்த ஸ்மார்ட் போன் கேமராக்களை பொறுத்தவரை, ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதில் 108 மெகாபிக்சல் சாம்சங் எச்எம் 2 சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் (120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் எஃப் / 2.2 லென்ஸ்) + 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் + 2 மெகாபிக்சல் டெப்த் லென்ஸ் ஆகியவைகள் உள்ளது. மேலும் இதன் செல்பீ கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்சல் பெற்றிருக்கும்.

Mi 10i சார்ஜிங் அம்சங்கள்:

இந்த Mi 10i ஸ்மார்ட்போனை பொறுத்தவரை 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. மேலும் சுமார் 30 நிமிடத்தில் 68 சதவீத சார்ச்சிங்கும் 58 நிமிடத்தில் 100 சதவீத சார்ஜ் ஏறிவிடும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இதனுடைய பேட்டரி 4,820mAh பவர் பேக் கொண்டுள்ளது. மேலும் இது 5 ஜி எனவும், இதனுடன் யூ.எஸ்.பி டைப் சி போர்டுக்கும், மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவை இடம் பெற்றிருக்கும்.

ஜனவரியில் இந்த 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – மேலாண் இயக்குனர் அறிவிப்பு!!

Mi 10i விலை மற்றும் அறிமுக தேதி:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் பெற்றிருந்தால் இதன் விலை – 20,999
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் பெற்றிருந்தால் இதன் விலை – 21,999
இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் பெற்றிருந்தால் இதன் விலை – 23,999

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here