ஜனவரியில் இந்த 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – மேலாண் இயக்குனர் அறிவிப்பு!!

0

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் வரும் ஜனவரி 15 (திருவள்ளுவர் தினம்) உட்பட 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் என அனைத்தும் மூடப்படும் என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் மோகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

டாஸ்மாக் மூடல்:

தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டன. பின்னர் கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் கடந்த மே 7ம் தேதி முதல் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் மதுபான வியாபாரம் சூடுபிடித்தது. தீபாவளி, புத்தாண்டு என பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட அதிகளவு வியாபாரம் நடைபெற்றது.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இந்நிலையில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்த டாஸ்மாக் பார்கள் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. மேலும் பார்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. தற்போது டாஸ்மாக் மேலாண் இயக்குனர் மோகன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி 16, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் முறையே திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here