Sunday, May 12, 2024

கிடுகிடுவென உயர்ந்த சின்ன வெங்காயம் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

Must Read

தமிழகத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால், சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை கிடுகிடு என்று உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் கனமழை:

சின்னமானுர் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கர் வயல் வெளிகளில் இரண்டு போகம் நெல் சாகுபடி விவசாயம் செய்யப்படுகிறது. இது முல்லை பெரியாறு பாசனம் மூலமாக நடைபெறுகிறது. அதே போல் நிலத்தடி மற்றும் ஆழ்குழாய் பாசனம் மூலமாக எரசக்கநாயக்கனூர், சீலையம்பட்டி, சின்ன ஓவுலாபுறம், காமாட்சிபுரம், சீப்பாலகோட்டை, குச்சனூர், துரைசாமிபுரம், மார்க்கையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் நிலப்பரப்பில் தனிப்பயிராகவும், சில பகுதிகளில் ஊடு பயிராகவும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

விதைத்த 70 நாட்களில் வெங்காயம் அறுவடைக்கு வந்து விடும். இப்படியாக விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். அதனால் கடந்த சில நாட்களாகவே சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து தான் இருந்தது. சாகுபடி செய்யப்படும் வெங்காயம் தேனி மாவட்டத்தை தவிர்த்து மற்ற வெளி மாவட்டங்களுக்கும், கேரளா மாநிலத்திற்கும் தினமும் அனுப்பி வைக்கப்படுகிறது. சின்ன வெங்காய விலை கிட்டத்தட்ட 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படும்.

விலை உயர்வு:

இப்படியாக இருக்க, பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்தது. அதே போல் மழை நீர் தேங்கியதால் சின்ன வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டது. இதனால் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு என்று உயர்ந்துள்ளது.

ஒரே மாதத்தில் அடர்த்தியான தலைமுடிகளை பெற வேண்டுமா??? சூப்பரான டிப்ஸ் உங்களுக்காக!!

ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கவலை அடைந்து உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -