Sunday, May 19, 2024

நிவர் புயலின் முன்னெச்சரிக்கை – 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை ரத்து!!

Must Read

தமிழகத்தில் நிவர் என்ற புயலின் தாக்கத்தை எதிர்கொள்வதற்கு ஒரு சில மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக புயல் தாக்கவிருக்கும் 7 மாவட்டங்களுக்கு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஆம்னிபேருந்து இயங்காது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

“நிவர்” புயல்

கஜா என்ற புயல் போன ஆண்டு தமிழகத்திற்கு ஒரு பெரும் ஆட்டத்தை காட்டி விட்டு போனது. அத்தகைய புயலினால் மக்கள் இழந்தது ஏராளம். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு புதியதாக நிவர் என்ற புயல் உருவாகியுள்ளது. இது வடகிழக்கு காற்றழுத்த தாழ்வுப்பகுதியில் உருவான ஒரு சில மாற்றத்தால் உருவாகியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

nivar cylone
nivar cylone

நிவர் புயல் சென்னையிலிருந்து 630 கி.மீ தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 600 கி.மீ தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

ஆம்னி பேருந்து நிறுத்தம்

நிவர் புயலினால் அதிகம் தாக்கம் ஏற்படவிருக்கும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்தகைய இடங்களில் இருந்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிவர் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள இருக்கும் 7 மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை , திருவாரூர், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அறிவித்துள்ளனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

omni bus
omni bus

இத்தகைய மாவட்டங்களின் வழியே பிற மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்து சேவையும் ரத்து செய்யபட்டுள்ளது. இவை இன்று மதியம் 1 மணி முதல் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை இயங்காது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -