Wednesday, May 8, 2024

கைலாசாவில் புது கரன்சி, பொருளாதார கொள்கை – நிறைய பணம் உள்ளதாக நித்யானந்தா பெருமிதம்!!

Must Read

அனைவரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் விதமாக பிரபல போலி சாமியார் நித்யானந்தா தனது கைலாச நாட்டிற்கு வங்கி, பாஸ்போர்ட், பொருளாதார கொள்கை என்று வேற லெவெலில் அறிவிப்புகளை விடுத்துள்ளார்.

தேடப்படும் சாமியார்:

பல விதமான சர்சைகளில் சிக்கியவர் பிரபல போலி சாமியார் நித்யானந்தா. அவர் பல மோசடிகளை செய்துள்ளதால், கர்நாடக மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், தான் அவர் தலைமறைவாகி விட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்று கூட யாருக்கும் தெரியாது, ஆனால், அவரது சார்பில் அவ்வப்போது அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

nithyanandha in kailasa
nithyanandha in kailasa

முதல் கட்டமாக, அவர் ” கைலாச” என்று ஒரு நாட்டை உருவாக்கியதாகவும்,அதில் வாழ விருப்பமுள்ளவர்கள் வரலாம் என்று கூறப்பட்டது. இதனை கேள்வி பட்ட அரசுகள் அவரை தீவிரமாக தேடி வந்தது. ஆனால், அவர் எங்கு உள்ளார் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

தற்போது புதிய அறிவிப்புகள்:

கடந்த சில நாட்களாக அவர் சார்பில் எந்த அறிவிப்புகளும் வரவில்லை. ஆனால், இந்த கிருஷ்ணா ஜெயந்தி அன்று அவர் தனது பக்தர்களுக்கு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டார்.

அதில் , நன்கொடைகள் கிடைத்து இருப்பதாகவும், அதன் மூலமாக வாடிகன் வங்கியை மாதிரியாக கொண்டு ” ‘ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா’ உருவாக்கபட்டுள்ளது என்றும், அதில் 300 பக்க பொருளாதார கொள்கையை வடிவமைத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!!

nithyanandha
nithyanandha

உள்நாட்டுக்கு ஒரு கார்ன்சியும் வெளிநாட்டுக்கு ஒரு கரன்ஸியையும் அச்சடித்துள்ளாராம். இதனை பற்றிய மேலும் விவரங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவருக்கு எதிராக கர்நாடக அரசு ‘புளு கார்னர்’ நோட்டிசையும் வெளியிட்டுள்ளது. இது அனைவர் மத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெலிசில் என்று நாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சென்னை விமான நிலையம் to கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் சேவை., வெளியான மாஸ் தகவல்!!!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மாநகர் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பயணிகள் எளிதாக கிளாம்பாக்கம் வந்து செல்வதற்கான...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -