அசீம் உண்மையான குணம் இது தான்.., எல்லாமே வெளிய வந்துருச்சு.., ஓபன் டாக் கொடுத்த முக்கிய பிரபலம்!!

0
அசீம் உண்மையான குணம் இது தான்.., எல்லாமே வெளிய வந்துருச்சு.., ஓபன் டாக் கொடுத்த முக்கிய பிரபலம்!!
அசீம் உண்மையான குணம் இது தான்.., எல்லாமே வெளிய வந்துருச்சு.., ஓபன் டாக் கொடுத்த முக்கிய பிரபலம்!!

பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள அசீம் குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் அசீம்:

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர் அசீம் கலந்து கொண்டதை அடுத்து இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களுடன் பேசும் விதம் சில நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் இவர் மீது இருந்த நல்ல மதிப்பு குறைய தொடங்கியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால்,கடந்த வாரம் கமல்ஹாசன் கூட அசீமை கண்டித்தார். அதன் பிறகு அசீம்‌ தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தி போட்டியில் தனது கவனத்தை செலுத்தி விளையாடி வருகிறார். என்ன தான் மற்ற போட்டியாளர்கள் இவரை தொடர்ந்து எவிக்சனுக்கு தள்ளினாலும், ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் இன்று வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வருகிறார்.

பழைய படத்தை தூசி தட்டும் அபிஷேக் பச்சன்.., அதுவும் தமிழ் படம்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

இந்நிலையில் நடிகை சுபத்ரா ஒரு பேட்டியில், அசீம் நடித்த “பூவே உனக்காக” சீரியலின் ஹீரோயினுக்கும் இவருக்கும் ஒரு முறை பயங்கர சண்டை நடந்துள்ளது என்றும், இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் எப்படி நடந்து கொள்கிறாரோ அது தான் அவரது உண்மையான முகம் என்றும் கூறியுள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அசீமுக்கும் இப்படியான பல நெகட்டிவ் கமெண்ட்ஸ் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here