பழைய படத்தை தூசி தட்டும் அபிஷேக் பச்சன்.., அதுவும் தமிழ் படம்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

0
பழைய படத்தை தூசி தட்டும் அபிஷேக் பச்சன்.., அதுவும் தமிழ் படம்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!
பழைய படத்தை தூசி தட்டும் அபிஷேக் பச்சன்.., அதுவும் தமிழ் படம்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

இயக்குனர் மதுமிதா படைப்பில் உருவான கே.டி.என்கிற கருப்புதுரை திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மதுமிதா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் மதுமிதா. இவர் வல்லமை தாராயோ, கொல கொலயா முந்திரிக்கா, மூனே மூணு வார்த்தை, கே.டி என்கிற கருப்பு துரை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கியதில் கே.டி என்கிற கருப்பு துரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படத்தில் மு. ராமசாமி, படவா கோபி, நாக விஷால், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இந்த திரைப்படம் ஹிந்தியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

காதலை அறிவித்த என்ஜாய் எஞ்சாமி பாடகர் தெருக்குறல் அறிவு .,போட்டோவுடன் அவரே போட்ட பதிவு!!

அதுமட்டுமின்றி நிகில் அத்வானி தயாரிக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான மு. ராமசாமி ரோலில் பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி மாதம் கோவாவில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் படக்குழுவினரிடம் இருந்து வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here