வாடகைத்தாய் சர்ச்சை குறித்து நயன்-விக்கி எந்த விளக்கமும் தரவில்லை.., சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!!

0
வாடகைத்தாய் சர்ச்சை குறித்து நயன்-விக்கி எந்த விளக்கமும் தரவில்லை.., சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!!
வாடகைத்தாய் சர்ச்சை குறித்து நயன்-விக்கி எந்த விளக்கமும் தரவில்லை.., சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!!

நயன்-விக்கி வாடகைதாய் சர்சையை குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை என்று தமிழ்நாடு சுகாதார துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

நயன்-விக்கி:

தென்னிந்திய சினிமாவில் படு பிசியாக இருந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் இருவரும் சேர்ந்து வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுள்ளனர். இந்த சம்பவத்தால் பலரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் சில பிரபலங்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் நயன்-விக்கி வாடகைத்தாய் சட்டத்தை மீறியுள்ளார்களா என்பதை தனிக்குழு ஒன்று அவர்களை விசாரித்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை தரப்பில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணம் செய்தது குறித்து பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படும் என்று விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தால் தான் நான் கமலுடன் சேர்ந்து நடிக்கவில்லை.., உண்மையை உடைத்த நடிகை நதியா!!

அதுமட்டுமின்றி நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் எந்த விளக்கமும் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here