தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம்.,, போராட்டத்தை கையில் எடுத்துள்ள அரசு ஊழியர்கள்!!

0

தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து CPS ஒழிப்பு இயக்கத்தினர் நடைபயண போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

நடைபயண போராட்டம்:

இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திவிட்டன. இந்த வகையில் தமிழகத்திலும், CPS ஒழிப்பு திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், நேற்று (அக்டோபர் 16) CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் சேலம் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க அலுவலகக் கட்டடத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.இராமாயி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது , புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதி நடை பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தால் தான் நான் கமலுடன் சேர்ந்து நடிக்கவில்லை.., உண்மையை உடைத்த நடிகை நதியா!!

இதன் அடிப்படையில், நடைபயணம் அஸ்தம்பட்டியில் ஆரம்பித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை முடிவடையும். இதையடுத்து CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here