Friday, April 26, 2024

நாளை மாலை நாட்டுமக்களிடம் உரைநிகழ்த்த இருக்கும் பிரதமர்!!

Must Read

பிரதமர் நரேந்திர மோடி, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிலவரம், சீனா விவகாரம், ரஃபேல் போர் விமானங்கள் இணைப்பு, புதிய கல்வி கொள்கை உள்ளிட்டவை பிரதமர் மோடியின் உரையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் உரையாடல் குறித்து எதிர்பார்ப்பு

கொரோனா லாக்டவுன் தொடங்கியது முதல் லாக்டவுன் அமல், நீட்டிப்பு, கட்டுப்பாடுகள், தளர்வுகள் தொடர்பாகவும் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி குறித்தும் பிரதமர் மோடி தமது உரையில் சுட்டிக் காட்டினார். கடந்த மாதம் 30-ந் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார். அவரது உரைகளிலேயே மிகச் சிறிய உரையாக அது இருந்தது. மொத்தம் 16 நிமிடங்கள் மட்டுமே மோடி பேசியிருந்தார்.

ஆகஸ்ட் மாதம் டாஸ்மாக் கடைகள் அடைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!

இந்த நிலையில் நாளை மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி மீண்டும் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது; விமானப் படையில் ரஃபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன; சீனாவுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. அத்துடன் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

புதிய கல்விக் கொள்கை:

34 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்தது. புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதுதவிர, 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம், 15 ஆண்டுகளில் இணைப்பு கல்லூரி என்ற முறை நிறுத்தம்,கல்லூரிகளில் சோவதற்கு தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வு, எம்.ஃபில். படிப்பு நிறுத்தம், 12ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி,

2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி, உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பை தொடரலாம், உள்ளிட்ட அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன, இவை பிரதமர் மோடியின் உரையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘மன்கி பாத்’ – பிரதமர் உரையாடல்:

மன்கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் பிரதமர் மோடி உரையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு..  வெளியான முக்கிய தகவல்!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டு முடிவடைய இருப்பதால், பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள், கோடை விடுமுறை தினங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -