அமெரிக்காவில் முதல் முறையாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நாய் உயிரிழப்பு!!

0

அமெரிக்காவில் முதல்முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஜெர்மன் ஷெப்பெர்டு இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்று உயிரிழப்பு. கொரோனா தொற்றால் நாய் ஒன்று அமெரி்க்காவில் உயிரிழப்பது இதுதான் முதல்முறையாகும்.

கொரோனாவால் நாய் உயிரிழப்பு..!

உலகளவில் கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். அந்நாட்டில் கொரோனாவால் 46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 12 நாய்கள், 10 பூனைகள், ஒரு புலி, சிங்கம் ஆகியவற்றுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் எந்த மிருகங்களும் உயிரிழக்கவில்லை. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று நியூயார்க்கில் உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து நாயின் உரிமையாளர் கூறுகையில், நாங்கள் வளர்த்த ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த 7 வயது நாய் கொரோனாவால் உயிரிழந்தது. கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நாய்க்கு சுவாசக் கோளாறு இருந்தது. அதன்பின் ராபர்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டார். ஆனால், மே மாதம் கால்நடை மருத்துவர் வந்து எங்கள் நாயை பரிசோதித்தபோது நாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல நாயின் உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தது. கடந்த 11ம் தேதி ரத்தமாக வாந்தி எடுத்து உயிரிழந்தது எனத் தெரிவித்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

நாயைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர் கூறுகையில், நாய்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உண்மைதான். ஆனால் கொரோனா வைரஸால் உயிரிழந்ததா எனக் கூற இயலாது. நாயின் ரத்தப்பரிசோதனையில் இலிபோமா எனும் புற்றுநோய் இருப்பது தெரிகிறது எனத் தெரிவித்தார்.

நியூயார்க் நகர சுகாதாரத்துறை..!

இதுகுறித்து நியூயார்க் நகர சுகாதாரத்துறையினர் கூறுகையில், நாயின் உடலைப் பெற்று உடற்கூறு ஆய்வுக்கான ஏற்பாடுகளை செய்ய ஆயத்தமானோம். ஆனால், அந்த தகவலை நாயின் உரிமையாளர்களிடம் கூறியபோது, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி நாயை எரித்துவிட்டதாகத் கூறினர் என்று தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 31 வரை சர்வதேச விமான சேவை ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!!

முதல்முறையாக நாய் இறந்துள்ளது. அதேசமயம், மிருகங்கள், வீட்டுவளர்ப்பு பிராணிகள் மூலம் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது என்ற உறுதியான மருத்துவ ஆய்வுகள் ஏதும் இல்லை, அவ்வாறு ஏதும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், மனிதர்கள் மூலம் மிருகங்களுக்கு சில சூழல்களில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here