நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நம்மாழ்வார் விருது – குவியும் வாழ்த்துக்கள்!!

0
sivakarthikeyen
sivakarthikeyen

இன்று நம்மாழ்வாரின் நினைவு தினம். இதனை முன்னிட்டு இவரது நினைவு நாளில் பாரம்பரிய வேளாண் திருவிழா நடத்தி அதில் இவரது பெயரில் விருதுகளை வழங்குவர். அதற்காக இந்த ஆண்டில் நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டார்.

நம்மாழ்வார் விருது:

இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இளங்காடு ஏன்னும் சிற்றூரில் பிறந்தவர். இவர் தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களின் ஒருவர். இவருக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சுற்று சூழல் சுடரொளி விருதினை வழங்கி சிற்பித்துள்ளது. இன்று இவரது நினைவு தினம். இதற்காக வருடந்தோறும் பாரம்பரிய வேளாண் திருவிழா நடத்தி வருவார்கள். மேலும் அவர் பெயரில் விருது வழங்கி சிறப்பிப்பர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சினிமா நடிகர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மூலம் தமிழ் சினிமாவில் தனது கால்தடங்களை பதித்தவர் சிவகார்த்திகேயன். இவர் தனது விடாமுயற்சி மூலம் மிக உயர்ந்த இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார். தற்போது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே கூறலாம். இவர் சினிமாவில் மட்டும் அல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் யாருக்கும் தெரியாமல் சில நல்ல விஷயங்களை செய்து வருகிறார். சிலர் மருத்துவ செலவுக்கும் மற்றும் படிப்பு செலவிற்கும் தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார்.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!!

இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்களாக உள்ளார்கள். இவரது நடிப்பு,, நடனம் மற்றும் காமெடி முதலியவற்றால் அனைவரையும் கவர்ந்துள்ளார். தற்போது இன்று நம்மாழ்வாரின் நினைவு தினத்தை முன்னிட்டு இவருக்கு நம்மாழ்வார் விருது பாரம்பரிய வேளாண் திருவிழாவில் வைத்து வழங்க படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை தமிழக பாரம்பரிய விவசாயகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைத்து வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here