சுவையான ‘மட்டன் சுக்கா’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
mutton sukka
mutton sukka

மட்டன் அசைவ பிரியர்களின் ஒரு பிடித்தமான உணவு. அசைவ உணவுகளில் மட்டனில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்துகிறது. கருத்தரிப்பதில் பிரச்சனை உள்ள பெண்கள் மட்டன் சாப்பிடலாம். இப்பொது மட்டனை வைத்து சூப்பரான கிரேவி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மட்டன் – 1/2 கி

சின்ன வெங்காயம் – ஒரு கையளவு

மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

இஞ்சிபூண்டு விழுது

மிளகு – 2 தேக்கரண்டி

சீரகம் – 2 தேக்கரண்டி

மல்லி – 2 தேக்கரண்டி

பட்டை, கிராம்பு

வரமிளகாய் – 9

செய்முறை

முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி மட்டனை சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். அதன் பின் தண்ணீர் சேர்த்து மூடி 4 விசில் வைக்கவும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் அதில் மிளகு, சீரகம், மல்லி, வரமிளகாய் சேர்த்து வறுக்கவும். இதனை தண்ணீர் சேர்த்து மைப்போல அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

mutton sukka
mutton sukka

இப்பொழுது மற்றொரு கடாயில் நெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். அதன்பின் அரைத்து வைத்த மசாலாவை அதில் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். இப்பொழுது மட்டனை சேர்த்து நன்கு வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து நீர் வற்றியதும் இறக்கி பரிமாறினால் சுவையான மட்டன் சுக்கா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here