5ஜி வசதியுடன் ஐபோன் 12 அறிமுகம் – இந்திய வேரியண்ட் & விலை விபரம்!!

0

ஆப்பிள் ஐபோன் 12 மாடல்கள் இறுதியாக வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது நான்கு ஐபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் புதிய ஏ 14 பயோனிக் சிப்செட்டுடன் வருகின்றன. வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் அதன் புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும். இம்முறை கொரோனா பாதிப்பு காரணமாக தாமதமாக வெளியாகி உள்ளது.

ஐபோன் 12:

புதிய ஐபோன்கள் ஐபோன் 5 மற்றும் 5 எஸ் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருப்பதால் புதிய தொழில்நுட்பம் மற்றும் பழைய மாடல் ஆகியவற்றின் கலவையைக் கொண்டுவர ஆப்பிள் முயற்சித்துள்ளது. வெவ்வேறு வண்ணங்களில் வெளியிடப்பட்டு உள்ள ஐபோன் 12, 5 ஜி இணைப்புடன் வருகிறது. ஐபோன் 12 மாடல்களில் பின்புற கேமராவை தவிர பெரிதான வேறுபாடுகள் இல்லை. புரோ அல்லாத மாடல்களில் இரட்டை பின்புற கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. அதிக விலை கொண்ட ‘புரோ’ மாடல்கள் பின்புறத்தில் மூன்று கேமரா சென்சார்களுடன் வருகின்றன.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ஆப்பிளின் A14 பயோனிக் சிப் 5nm செயல்முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டின் ஏ 13 பயோனிக் சிப்பை விட 70% வேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சார்ஜிங் தொழில்நுட்பமும் இம்முறை மேம்படுத்தப்பட்டு உள்ளது. ஐபோன் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த வயர்லெஸ் சார்ஜிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஐபோன் 12 மினி 5.4 அங்குல திரை மற்றும் இன்றுவரை வெளியிடப்பட்ட ஆப்பிளின் மிகச்சிறிய ஐபோன் என கூறப்படுகிறது. இது 5 ஜி, ஏ 14 பயோனிக், ஓஎல்இடி திரை, புதிய கேமராக்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 விலை விபரம்:

இந்தியாவில், ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி 64 ஜிபி, 128 ஜிபி, மற்றும் 256 ஜிபி மாடல்களில் நீலம், பச்சை, கருப்பு, வெள்ளை மற்றும் ரெட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ.69,900 முதல் தொடங்குகிறது.

ஆப்பிள் ஐபோன் 12 புரோ, 12 புரோ மேக்ஸ்:

ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ ‘பசிபிக் ப்ளூ’ கலரில் கிடைக்கும். வாட்டர் ரெஸிஸ்டண்ட், வயர்லெஸ் சார்ஜிங். 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உள்ளது. ஐபோன் 12 புரோ மேக்ஸ் 6.7 இன்ச் திரை அளவைக் கொண்டுள்ளது. லிடார் சென்சாருடன் பின்புறத்தில் மூன்று கேமராக்கள், ஏ 14 பயோனிக் மற்றும் பேஸ் அன்லாக் வசதியுடன் வருகிறது.

மூன்று 12 மெகாபிக்சல் கேமராக்கள் 4k 60 fps தரத்தில் வீடியோ ரெகார்ட் செய்ய வல்லது. இந்தியாவில், ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 புரோ மேக்ஸ் 128 ஜிபி, 256 ஜிபி, மற்றும் 512 ஜிபி மாடல்களில் கிராஃபைட், சில்வர், கோல்ட் மற்றும் பசிபிக் ப்ளூ கலர்களில் முறையே ரூ.1,19,900 மற்றும் ரூ.1,29,900 முதல் விலையில் வர உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here