Saturday, May 18, 2024

யானை மீது யோகா செய்த பாபா ராம்தேவ் – கீழே விழுந்த வீடியோ வைரல்!!

Must Read

பிரபல யோகா குருவான பாபா ராம்தேவ் யானை மீது அமர்ந்து யோகா செய்த போது தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யோகா குரு:

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பாபா ராம் தேவ் மக்களுக்கு யோகா கற்று தருகிறார். இவர் பதஞ்சலி முனிவரின் வழியில் நடத்தும் யோகா வகுப்புகளில் மக்கள் பெரும் திரளாக பங்கேற்பர். இவர் இந்தியாவில் பரவலாக உள்ள ஊழலை எதிர்த்து போராட “பாரத் சுவாபிமான் ஆந்தோலன்” என்ற அமைப்பை நிறுவியுள்ளார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இதன் காரணமாக மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டவர். கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடித்ததாக கூறினார். அது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. இப்படியான நிலையில், கடந்த திங்கள் கிழமை உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் ராம் நரேதி ஆசிரமத்தில் யானை மீது ஏறி யோகா செய்துள்ளார்.

நெட்டிசன்களின் கருத்து:

அப்போது யானை லேசாக அசைந்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய ராம்தேவ் அப்படியே யானையில் இருந்து தவறி விழுந்துள்ளார். ஆனால், உடனடியாக எழுந்து நடந்து சென்றார். ஆனாலும், அவருக்கு காயங்கள் ஏற்பட்டதால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நலனுக்காக அனைவரும் பிராத்தனை செய்கின்றனர். அவர் கீழே விழுந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

baba ram dev felling down
baba ram dev felling down

ட்விட்டரில் மட்டும் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். இது குறித்து சிலர் அவர் தவறி விழவில்லை கீழே குதித்துள்ளார் என்று, ஆகஸ்ட் மாதம் அவர் சைக்கிள் ஓட்டி கீழே விழுந்த வீடியோவையும் ஒப்பிட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -