கடைசில இதுவும் போச்சா.., நம்ப வச்சு கழுத்தறுக்கப்பட்ட வடிவேலு.., அதிரடி நடவடிக்கை!!

0
கடைசில இதுவும் போச்சா.., நம்ப வச்சு கழுத்தறுக்கப்பட்ட வடிவேலு.., அதிரடி நடவடிக்கை!!
கடைசில இதுவும் போச்சா.., நம்ப வச்சு கழுத்தறுக்கப்பட்ட வடிவேலு.., அதிரடி நடவடிக்கை!!

இசையமைப்பாளர் தேவா மற்றும் வைகைப்புயல் வடிவேலு உட்பட 50 பேருக்கு போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

டாக்டர் பட்டம்

பொதுவாக ஏதாவது துறையில் சாதித்தவர்களுக்கும், மதிப்பிற்குரியவர்களுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வெவ்வேறு பல்கலைக்கழகங்கால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பல சினிமா பிரபலங்களும், அரசு சம்பந்தப்பட்ட துறையில் இருக்கும் பணியாளர்களும் வாங்கியுள்ளனர். கடந்த ஆண்டு கூட நடிகர் சிம்பு வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல்கலைக்கழகமே இல்லாத அமைப்பு ஒன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் என்ற பெயரில் நடிகர்களை மோசடி செய்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் இசையமைப்பாளர் தேவா, வைகைப்புயல் வடிவேலு, சாண்டி மாஸ்டர், கோகுல் மற்றும் ஈரோடு மகேஷ் உள்ளிட்ட 50 பேருக்கு போலியான டாக்டர் பட்டம் கொடுத்து மோசடி செய்துள்ளனர். மேலும் அந்த அமைப்பு நடத்திய நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் அண்ணா பல்கலைக்கழகம் அச்சடித்திருந்தது மட்டுமின்றி அரசு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களில் மட்டுமே அச்சிடக் கூடிய அரசு முத்திரையும் அழைப்பிதழில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

லியோவை வென்ற ரோலக்ஸ்.., தலையில துண்டை போட்ட லோகேஷ்.., அதுக்குள்ள போட்டி ஸ்டார்ட் ஆயிருச்சேப்பா!!

சாமானிய மக்களுக்கு அந்த முத்திரை எப்படி கிடைத்தது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் காவல் துறையிடம் புகார் அளிக்க முடிவெடுத்துள்ளனர். அதாவது ஓய்வு பெற்ற நீதிபதியையும், அண்ணா பல்கலைக் கழகத்தையும் ஏமாற்றியதாகவும் காவல்துறையிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here