லியோவை வென்ற ரோலக்ஸ்.., தலையில துண்டை போட்ட லோகேஷ்.., அதுக்குள்ள போட்டி ஸ்டார்ட் ஆயிருச்சேப்பா!!

0
லியோவை வென்ற ரோலக்ஸ்.., தலையில துண்டை போட்ட லோகேஷ்.., அதுக்குள்ள போட்டி ஸ்டார்ட் ஆயிருச்சேப்பா!!
லியோவை வென்ற ரோலக்ஸ்.., தலையில துண்டை போட்ட லோகேஷ்.., அதுக்குள்ள போட்டி ஸ்டார்ட் ஆயிருச்சேப்பா!!

நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் வியாபாரத்தை சூர்யா 42 திரைப்படம் முறியடித்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

லியோ – சூர்யா 42

தற்போதைய சினிமா உலகில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது லோகேஷ் இயக்கும் லியோ தான். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும், அதற்காக படக்குழுவின் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகின.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமின்றி இப்படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள்ளே 400 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளதாக கூறப்பட்டது. அதாவது படத்தின் ஓடிடி, சாட்டிலைட் மற்றும் பிற மொழி வெளியிட்டு உரிமம் ஆகியவற்றை சேர்த்து 400 கோடி வசூலானதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் லியோ படத்தின் இந்த வசூலை பிரபல திரைப்படம் முறியடித்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

ஆஹா.., இப்போவே ஹைப் ஆகுதே .., பொன்னியின் செல்வன் 2 படத்தின் கிலிம்ஸ் வீடியோ வைரல்!!

அதாவது இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 படம் வெளியாவதற்கு முன்பாக கிட்டத்தட்ட 500 கோடி வரை வியாபாரம் பேசப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்து உள்ளது. இதனால் லியோவை வசூலில் அடித்த ரோலக்ஸ் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here