ஐசிசி ரேங்கிங்: டெஸ்டின் நம்பர் 1. இடத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவின் அஸ்வின், ஜடேஜா!!

0
ஐசிசி ரேங்கிங்: டெஸ்டின் நம்பர் 1. இடத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவின் அஸ்வின், ஜடேஜா!!
ஐசிசி ரேங்கிங்: டெஸ்டின் நம்பர் 1. இடத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவின் அஸ்வின், ஜடேஜா!!

ஐசிசியின் பவுலர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில், இந்தியாவின் அஸ்வின் நம்பர் 1. இடத்தை எட்டி அசத்தி உள்ளார்.

ஐசிசி

சர்வதேச அளவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் டெஸ்ட் போட்டிகளிலேயே கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், ஐசிசியானது டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், டெஸ்டின் பவுலர்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், 864 புள்ளிகளுடன் நம்பர் 1. இடத்தை பிடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும், இந்த போட்டியில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்தியாவின் ஜடேஜா 763 புள்ளிகளுடன் 8 வது இடத்தை எட்டி உள்ளார். இந்த பட்டியலில், பும்ரா 4, முகமது ஷமி 18, அக்சார் பட்டேல் 28, உமேஷ் யாதவ் 31 ஆகிய இடங்களை தக்க வைத்து உள்ளனர். இதே போல, டெஸ்டின் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா, அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் முறையை 1வது, 2வது மற்றும் 5வது இடத்தை தக்க வைத்துள்ளனர்.

IND vs AUS Test: 109 ரன்களுக்குள் சுருண்ட இந்தியா…, 15 வருடமாக தொடரும் மோசமான சாதனை!!

டெஸ்டின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இந்திய வீரர்களான ரிஷப் பண்ட் 8வது, ரோஹித் சர்மா 9வது, விராட் கோலி 17வது, புஜாரா 25வது, ஸ்ரேயாஸ் ஐயர் 27வது, மயங்க் அகர்வால் 28வது மற்றும் ஜடேஜா 32 வது இடத்தை பிடித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 3 வது டெஸ்ட் போட்டியை விளையாடி முடிக்கும் நிலையில், இந்த டெஸ்ட் தரவரிசையில் அதிக மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here