IND vs AUS Test: 109 ரன்களுக்குள் சுருண்ட இந்தியா…, 15 வருடமாக தொடரும் மோசமான சாதனை!!

0
IND vs AUS Test: 109 ரன்களுக்குள் சுருண்ட இந்தியா..., 15 வருடமாக தொடரும் மோசமான சாதனை!!
IND vs AUS Test: 109 ரன்களுக்குள் சுருண்ட இந்தியா..., 15 வருடமாக தொடரும் மோசமான சாதனை!!

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்குள் சுருண்டதன் மூலம் மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளது.

இந்திய அணி:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் இந்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய, ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் 7.2 ஓவரிலேயே விக்கெட்டை மேத்யூ குஹ்னெமனை இடம் பறிகொடுத்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ரோஹித் 12, சுப்மன் கில் 21 என வெளியேறியதை அடுத்து, புஜாரா 1, ஜடேஜா 4, ஸ்ரேயாஸ் ஐயர் 0 என அடுத்தடுத்து, நிலையில்லாமல் தடுமாறி தங்களது விக்கெட்டை இழந்தனர். விராட் கோலியுடன் இணைந்த கே எஸ் பரத் 6 விக்கெட்டுக்கு 25 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இதன் பிறகு, விராட் கோலி 22, கே எஸ் பரத் 17, அஸ்வின் 3, உமேஷ் யாதவ் 17 மற்றும் சிராஜ் 0 என தொடர்ந்து விக்கெட்டை இழக்க, இந்திய அணி 109 ரன்களுக்குள் சுருண்டது. அக்சார் பட்டேல் மட்டும் 12* ரன்களுடன் களத்தில் இருந்தார்.

WPL 2023 டிக்கெட் விலை அறிவிப்பு…, பெண்கள், குழந்தைகளுக்கு இலவசமா?? வெளியான நியூ அப்டேட்!!

இந்திய அணி தனது சொந்த மண்ணில் 109 ரன்களுக்குள் சுருண்டதன் மூலம், கடந்த 15 ஆண்டுகளில் 4வது முறை குறைந்த ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இதற்கு முன், 2008ல் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 76, 2017ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 105 மற்றும் 107 ரன்களுக்குள்ஆல் அவுட்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here