சீரஞ்சீவி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபரீதம்.., நூலிழையில் உயிர் தப்பிய படக்குழுவினர்!!

0
சீரஞ்சீவி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபரீதம்.., நூலிழையில் உயிர் தப்பிய படக்குழுவினர்!!
சீரஞ்சீவி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபரீதம்.., நூலிழையில் உயிர் தப்பிய படக்குழுவினர்!!

நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சாரியா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆச்சாரியா திரைப்படம்

தெலுங்கு வட்டாரங்களில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிரஞ்சீவி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. இப்படத்தை தொடர்ந்து உருவாகிய போலா சங்கர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. தற்போது பிரபல இயக்குனர் கொரட்டல சிவா படைப்பில் உருவாகி வரும் ஆச்சாரியா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுபோக இவருடைய மகன் ராம்சரண் மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக ஐதராபாத்தில் தர்மஸ்தலி என்ற இடத்தில் பிரம்மாண்ட செட் ஒன்றை அமைத்து படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் செட்டில் அகோர தீ விபத்து ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் படக்குழுவினர் என்ன செய்வதென்று தெரியாமல் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

கவுரவத்திற்காக ஆதிரை உயிரை பணயமாக்கும் குணசேகரன்.., சுதாரிக்கும் கதிர்.., எதிர்நீச்சல் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!!

வெகு நேரமாக போராடி தீயை அணைத்தனர். தீயினால் பாதி செட் கருகி நாசமானது. கிட்டத்தட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக படக்குழுவினர் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர் . இந்த விபத்து மின் கசிவினால் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் அந்த செட்டில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்கும் கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற படப்பிடிப்பும் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here