
எதிர்நீச்சல் சீரியல் கொஞ்சம் கூட சலிப்பில்லாமல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. ஆதிரைக்கு பிடிக்காதா திருமணத்தை நடத்த குணசேகரன் எடுத்த முடிவால் வெறுப்பில் இருந்து வருகிறார் ஆதிரை. அருணையும். ஆதிரையையும் சேர்த்து வைக்க ஜனனி போராடி வருகிறார். ஆதிரை எனக்கு பிடிக்காத திருமணத்தை செய்து வைத்தால் உயிரோடு இருக்க மாட்டேன் என்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனா குணசேகரன் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் ஆதிரை விஷத்தை குடித்து விடுகிறார். இதை கண்டு குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். சக்தி ஆதிரையை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, குணசேகரனுக்கு கொஞ்சம் கூட தன்னுடைய தங்கை என்ற உணர்வு வரவில்லை.
என்ன ஆலியா.., போட்ட ஆட்டம் எல்லாம் Waste ஆகிடும் போலையே.., ஆப்பு வைக்க வந்த புதிய சம்பவம்!!
இந்நிலையில் கதிர் துடித்து போகி தங்கையை பார்க்க மருத்துவமனைக்கு செல்ல குணசேகரன் மறுத்து நமக்கு தன்மானம் தாண்டா முக்கியம் ஆதிரையை போய் மருத்துவமனையில் நீ பார்க்க கூடாது என்கிறார். இதை பார்த்த கதிர் இதுதான் நம் அண்ணனுடைய குணமா என்று அவரை ஒரு மாதிரி பார்க்கிறார். இதை வைத்து பார்க்கும் போது குணசேகரனின் ஆணவ திமிரால் கதிரின் ஆதரவையும் குணசேகரன் இழப்பார் என்று தான் தெரிகிறது.