தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படலாம் என்ற முக்கிய அறிவிப்பை ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் உறுதி:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற மார்ச் 20 ஆம் தேதி, 2023-24 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட் நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்பட உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த பட்ஜெட்டில், பள்ளி ஆசிரியர்களுக்கு பல நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசிய முதல்வர், அனைத்து இடைநிலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும் என்றும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
WPL 2023 டிக்கெட் விலை அறிவிப்பு…, பெண்கள், குழந்தைகளுக்கு இலவசமா?? வெளியான நியூ அப்டேட்!!
இது சார்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடலாம் என சொல்லப்படுகிறது. இதே போல், பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு, பணி நிரந்தரம் சார்ந்த அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது.