ஆல்ரவுண்டராக சாதனை படைத்த ஜடேஜா…, இந்த உச்சத்தை எட்டிய 2வது இந்திய வீரர்!!

0
ஆல்ரவுண்டராக சாதனை படைத்த ஜடேஜா..., இந்த உச்சத்தை எட்டிய 2வது இந்திய வீரர்!!
ஆல்ரவுண்டராக சாதனை படைத்த ஜடேஜா..., இந்த உச்சத்தை எட்டிய 2வது இந்திய வீரர்!!

இந்தியாவின் ஆல்ரவுண்டரான ஜடேஜா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஜடேஜா:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி, பார்டர் கவாஸ்கர் டிராபியை வெல்லும் முனைப்பில் இன்று 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், இந்திய வீரர்கள் ஒருவர் கூட 30 ரன்களை தாண்டாத நிலையில், 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில், டிராவிஸ் ஹெட் வந்த வேகத்தில் (9 ரன்கள்) ஜடேஜாவின் சுழலில் விக்கெட்டை இழந்தார்.

IND vs AUS Test: 109 ரன்களுக்குள் சுருண்ட இந்தியா…, 15 வருடமாக தொடரும் மோசமான சாதனை!!

இதன் மூலம், ஜடேஜா சர்வதேச அரங்கில் 500 விக்கெட் மற்றும் 5000 ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார். இதுவரை, ஜடேஜா 298 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 5527 ரன்களை அடித்துள்ளார். இதற்கு முன், இந்தியாவின் கபில்தேவ் 9031 ரன்கள் மற்றும் 687 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here