
விஜய் டிவியில் அனல் பறக்கும் கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது ஈரமான ரோஜாவே 2 சீரியல். இதில் காவியா காதலித்த உண்மை பார்த்திபனுக்கு தெரிய, காவியாவை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ஏன் இந்த உண்மையை என்னிடம் மறைத்தாய் என சண்டைபோடுகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகளுக்கான promo வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது பார்த்திபனுடன் வாழ காவியா மறுத்ததற்கு இதுதான் காரணம் என தெரிந்து கொண்ட துரை அருணாசலத்திடம் தன் மகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் படி கேட்கிறார். அதற்கு தேவி வேறு ஒருவனை காதலித்து அவனுடன் எப்படி எல்லாம் நடத்திருப்பாலோ, அப்படி பட்ட உன் பெண்ணோடு பார்த்திபன் வாழ முடியாது என்கிறார். அதை கேட்ட துறை ”அடுத்தவங்க புருஷனோடு வாழ நினைக்கும் உன் மகள் தான் அசிங்கம் பிடித்தவள் என கூறுகிறார்.
என்ன ஆலியா.., போட்ட ஆட்டம் எல்லாம் Waste ஆகிடும் போலையே.., ஆப்பு வைக்க வந்த புதிய சம்பவம்!!
இதை கேட்டு ஆத்திரமடைந்த தேவி துறையை கன்னத்தில் அறைகிறார். நடந்ததை தெரிந்து கொண்ட பிரியா, காவியா தேவி ரூமிற்க்கு சென்று அவரை மாறி மாறி அடிக்கின்றனர். மேலும் இந்த குடும்பத்தில் உள்ள எல்லார் முன்னாடியும் எங்க அப்பா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்சரிக்கிறார்கள்.