சாதனைப் பட்டியலில் விராட் கோலியுடன் இணைந்த இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்!!

0
சாதனைப் பட்டியலில் விராட் கோலியுடன் இணைந்த இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்!!
சாதனைப் பட்டியலில் விராட் கோலியுடன் இணைந்த இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ், டெஸ்ட் அரங்கில் விராட் கோலியுடனான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

உமேஷ் யாதவ்

பார்டர் டெஸ்ட் டிராபியின் 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி மோதி வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், அதிகபட்சமாக விராட் கோலி 22, சுப்மன் கில் 21, ஸ்ரீகர் பரத் மற்றும் உமேஷ் யாதவ் தலா 17 ரன்களை எடுத்திருந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவர்களில், வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ், 13 பந்துகளில் ஒரு பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 17 ரன்கள் அடித்தார். இதில், 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் இவர், விராட் கோலி சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது, 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள உமேஷ் யாதவ், இதுவரை 24 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

ஐசிசி ரேங்கிங்: டெஸ்டின் நம்பர் 1. இடத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவின் அஸ்வின், ஜடேஜா!!

இதே போல, விராட் கோலியும் தனது சர்வதேச டெஸ்டில் 8217 ரன்களை அடித்திருந்தாலும், 24 சிக்ஸர் மட்டுமே அடித்துள்ளார். இதன் மூலம், டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ள இந்திய வீரர்களில் 17 வது இடத்தை விராட் கோலியுடன் உமேஷ் யாதவ் பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில், சேவாக் 91, தோனி 78, சச்சின் 69, ரோஹித் 68 மற்றும் கபில் தேவ் 61 என டாப் 5 இடத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here