முகேஷ் அம்பானியின் அடுத்த திட்டம் – பல்வேறு பயன்களுடன் சூப்பர் ‘App’ ..!

0

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பேஸ்புக் ஆகியவை WeChat போல ஒரு பல்நோக்கு பயன் உடைய ஆப்பினை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது பொதுவாக பொழுதுபோக்கு மட்டும் அல்லாது பலவகையில் பயனுள்ளதாக இந்த ஆப் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பல்நோக்கு பயன்பாடு..!

சூப்பர் செயலி சீனாவில் இருக்கும் WeChat போன்றதொரு வரிசையில் இருக்கும். மேலும் இது பேஸ்புக்கின் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்துகிறது இதனால் இது நாட்டின் மிகவும் பிரபலமான உடனடி செய்தி பயன்பாடாகவும் இருக்கும்.

பல்நோக்கு பயன்பாடு பயனர்கள் ரிலையன்ஸ் சில்லறை கடைகள், ajio.com, ஹோட்டல் புக்கிங் மற்றும் கேமிங் போன்றவற்றினை இதில் அனுமதிக்கும் என கூறப்படுகிறது.

யார் முதலீடு..?

முதலீட்டு வங்கியாளராக மார்கன் ஸ்டான்லி இதில் முதலீட்டாளராக வரப்போகிறதாம். ஆக மூன்று பெரு கைகளும் கைகோர்க்க போவதால் இது ஒரு நிதி முதலீட்டுக்காக மட்டுமல்ல இந்த ஒப்பந்தம் ரிலையன்ஸ் மற்றும் பேஸ்புக் இரண்டையும் வேறுபடுத்தும் ஒரு வணிகத்தை உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது.

சூப்பர் ஆப்..!

ஐடியா, வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ் – கேஷ்பேக் ஆபர் அறிமுகம்..!

சீனாவின் Wechat ஆப் ஆசிய சந்தைகளில் மிகவும் பிரபலமானது. இந்த நிலையில் மூன்று ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கப்படும் இந்த சூப்பர் ஆப். இதன் இறுதியான முடிவுகள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இந்த முடிவுகள் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.

திட்டம் என்ன..?

சில்லறை விற்பனைக்காக ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் இதில் பொருட்களை வாங்க ஜியோ மணியையும், அஜியோவினையும் இதில் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் காரனனமாக இந்த திட்டம் இன்னும் வெளிவரவில்லை ஆகவே கூடிய விரைவில் வெளிவரும் என நம்பப்படுகிறது.

பெரும் புரட்சியை உருவாகும்..!

ரிலையன்ஸ் ஜியோ எப்படி தொலைத் தொடர்பு துறையில் ஒரு மாபெரும் புரட்சியை உருவாக்கியதோ அதே போல இதனையும் எதிர்பார்க்கலாம்.

ZOOM ஆப் பயன்படுத்துவது பாதுகாப்பானது இல்லை – மத்திய அரசு எச்சரிக்கை..!

ஏற்கனவே அமேசான் பிளிப்கார்டு போன்ற ஆன்லைன் சில்லறை விற்பனையை ஆன்லைன் மற்றும் ஆப்லைனிலும் உருவாக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் நிச்சயம் சந்தையில் ஒரு புரட்சியை உருவாக்கலாம் என்றும் கூறப்பட்டது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here