ஐடியா, வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ் – கேஷ்பேக் ஆபர் அறிமுகம்..!

0

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது இப்படி இருக்கும் நிலையில் மக்களால் ஏதும் வெளியே சென்று வாங்க முடியவில்லை மக்களின் மொபைல் போனிற்கு ரீசார்ஜ் செய்ய முடியவில்லை ,இதை பார்த்த  வோடபோன் ஐடியா நிறுவனம்  #RechargeforGood எனும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ரீசார்ஜ் செய்ய தெரியாத அல்லது இணைய வசதி இல்லாத குடும்பத்தார், நண்பர் அல்லது எவருக்கு வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்யலாம்.

வோடபோன் ஐடியா புது திட்டம்:

வோடபோன் ஐடியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஊரடங்கு உத்தரவால், மொபைல் போன் ரீசார்ஜ் செய்­யும் கடை­கள் மூடப்பட்டுள்ளன.இதனால்,இணையதளம் வாயிலாக ரீசார்ஜ் செய்ய முடி­யா­மல், வோட­போன் வாடிக்­கை­யா­ளர்­கள் தவிக்­கின்­ற­னர். ரீசார்ஜ் செய்வோருக்கு வோடபோன் ஐடியா சார்பில் ரீசார்ஜ் தொகையில் 6 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது ‘ரீசார்ஜ் பார் குட்’ என்ற சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கேஷுபாக் ஆப்பர்

வோட­போன் ஐடியா மொபைல் நிறுவன வாடிக்கையாளர்கள், ரீசார்ஜ் செய்யமுடி­யாத, வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு, ‘மை வோட­போன் ஆப் அல்­லது மை ஐடியா ஆப்’ டவுன்லோட் செய்து வாயி­லாக, ரீசார்ஜ் செய்து கொடுத்­தால், அத்தொகைக்கு ஏத்தவாறு  கேஷ்­பேக் சலுகை தொகை கூப்பன் வடிவில் சேர்க்கப்படும்.இந்த கூப்பன்களை வாடிக்கையாளர் அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சிறப்பு சலுகை, ஏப்., 30 வரை அம­லில் இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here