ZOOM ஆப் பயன்படுத்துவது பாதுகாப்பானது இல்லை – மத்திய அரசு எச்சரிக்கை..!

0

நாடு முழுவதும் கொரோனா பீதியில் உள்ளது . இதன் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஏப்ரல் 14 இல் முடிவடைவதாக இருந்த இந்த ஊரடங்கு கொரோனா அதிகரிப்பால் மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் வீட்டிலிருந்தே வேலை பார்த்துக்கொண்டு உள்ளனர். இதனால் மக்கள் அனைவரும் பயன்படுத்தும் ‘ஸூம்’ செயலி பாதுகாப்பானது அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது..

‘ஸூம்’ செயலி

நிறுவன ஊழியர்கள் பலர் வீட்டிலிருந்தே தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் பலர் பல்வேறு மொபைல் செயலி மூலமாக கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். இதில் ‘ஸூம்’ என்ற செயலின் பயன்பாடு தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்மூலமாக கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து இதனை எளிதாகப் பயன்படுத்த முடியும்.

Zoom Meetings app being exploited by hackers: Here's what you need ...

இதன்மூலமாக பலர் வீடியோ அழைப்பு மூலமாக ஒரே நேரத்தில் கலந்துரையாட முடியும். அரசு அலுவலக ஊழியர்கள்கூட இந்த செயலியைப் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகின. முக்கியமாக சென்னை உயர்நீதிமன்றத்தில்கூட இந்த செயலியைப் பயன்படுத்தி வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் செயலியைப் பயன்படுத்தி 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

Scheduling a Zoom Meeting and Inviting Participants | University ...

இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ‘ஸூம்’ செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் அதில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, இதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here