பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்வது எப்போது..?எவ்வாறு..? டிஜிபி திரிபாதி விளக்கம்..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஊரடங்கை மீறி தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் சுற்றிய வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

எவ்வாறு திரும்பப்பெறுவது..?

தமிழகத்தில் ஊரடங்கை மீறி நிறைய பேர் வாகனங்களில் உலா வருகின்றனர். நேற்று மட்டும் 1.97 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப் பெற்றுக்கொள்வது குறித்து டிஜிபி திரிபாதி அவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

  • பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப்பெற அந்தந்த நபருக்கு தொலைபேசியில் குறுந்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும்.
  • அந்த வகையில் குறிப்பிட்ட இடத்திற்கு FIR காப்பி, ஒரிஜினல் RC BOOK மற்றும் லைசென்ஸ் உடன் வர வேண்டும்.
  • ஏப்ரல் 24ம் தேதி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அந்தந்த வட்டாரத்தில் உள்ள காவல் நிலையங்களில் வாகனத்தை திரும்பப்பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here