எலும்பு முறிவால் அவதிப்படும் முகமது ஷமி – 2 மாசத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பொது ஏற்பட்ட காயத்தினால் அவதிப்பட்டு வருகிறார் முகமது ஷமி. அவர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடரில் விளையாட உளள்து. ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் முடிந்த நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் கடந்த 17 ஆம் தேதி துவங்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் முதல் போட்டியின் போது முகமது ஷமிக்கு கையில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

எலும்பு முறிவால் அவதிப்படும் ஷமி:

முதல் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் தங்களது விக்கெட்டை இழந்த நிலையில் முகமது ஷமி பேட்டிங்க்காக களத்திற்கு வந்தார். அவர் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. பார்ப்பதற்கு அது மிக பெரிய காயம் போல் தெரிந்ததால் அவர் உடனடியாக போட்டியில் இருந்து விலகினார்.

பின்பு ஸ்கேன் செய்து பார்க்கையில் அவருக்கு மணிக்கட்டில் உள்ள எலும்பு முறிந்துள்ளதாகவும், மேலும் அது முக்கியமான எலும்பு என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் அவர் பல நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

காதலியை கரம் பிடித்தார் கிரிக்கெட் வீரர் சாஹல்!!

மேலும் ஜனவரி மாதம் வரை களத்திற்கு செல்ல கூடாது என்றும் பந்து வீச்சை அது வரை மேற்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதத்திற்கு பிறகு அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் உடற்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியாதது போல் தெரிகிறது. எனவே ஷமி பிப்ரவரி மாதம் வரை களத்தில் இறங்க வாய்ப்பில்லை. அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது கேள்விக்குறியே?? அவரது இடத்தை தமிழக வீரர் நடராஜன் நிரப்புவார் எனவும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here