பிரபல திரைப்பட இயக்குனர் திடீர் மூளைச்சாவு – அதிர்ச்சியில் மோலிவுட்!!

0

இந்த வருடம் தொடங்கிய நாட்களில் இருந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். அதுவும் திரையுலகில் பல எதிர்பாராத இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதில் அடுத்த அதிர்ச்சியூட்டும் விஷயமாக மலையாள இயக்குனரான ஷாநவாஸ் மூளைச்சாவு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாநவாஸ்

சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பித்த கொரோனா நாடெங்கிலும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் இந்த கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பரவ தொடங்கியது. தொடர்ந்து பல உயிரிழப்புகளை சந்தித்து வருகிறோம். இதனால் லாக்டவுன் போடப்பட்டது. மக்கள் கூடும் பொதுவான இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவில்கள், திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் படப்பிடிப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. திரையரங்குகளும் மூடப்பட்டதால் படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட ஆரம்பித்தனர். அப்படி தமிழில் முதன்முதலில் ஓடிடியில் வெளியான படம் என்றால் அது ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தால்’ திரைப்படம் தான்.

மலையாளத்தில் முதன்முதலில் வெளிவந்த திரைப்படம் ‘சுபியும் சுஜாதாவும்’. வாய்பேச முடியாமல் இருக்கும் நாயகிக்கும், நாயகனுக்கும் இடையே காதல் மலர்வது தான் கதையே. இதில் அதிதி ராவ் நடித்திருப்பார். இந்த படமும் செம ஹிட் அடித்தது. இந்த படத்தின் இயக்குனர் தான் ஷாநவாஸ்.

‘விஐபி பையன் செல்வாக்கால தான், சொகுசு பங்களா வாங்கினாங்க’ – சித்ராவின் தோழி திடுக்கிடும் தகவல்!!

இவர் தனது அடுத்த படத்திற்காக கோவையில் உள்ள அட்டபாடியில் தங்கியுள்ளார். திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்படவே கடந்த சனிக்கிழமை அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் மூளைச்சாவு ஏற்பட்டதால் இறந்து விட்டதாக மருத்துவ வட்டாரம் இன்று காலை தெரிவித்துள்ளது. ஆனால் இது பற்றிய எந்த அதிகாரபூர்வமான தகவலும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here