இந்திய கிரிக்கெட் வீரரான சாஹல் மற்றும் நடன இயக்குனரான தனஸ்ரீக்கும் ஏற்கனவே நிச்சயம் நடந்த நிலையில் தற்போது முன்னறிவிப்பு எதுவுமின்றி தமது திருமணத்தை நடத்தியுள்ளனர். அவர்களின் திருமண புகைப்படங்கள் யாவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கிரிக்கெட் வீரர் சாஹல் திருமணம்
இந்திய கிரிக்கெட் வீரரான சாஹல் தனஸ்ரீயை காதலித்து வந்தார். தனஸ்ரீ நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பெற்றோர்களும் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு நிச்சயம் நடைபெற்றது. அதன் பிறகு ஐபிஎல் தொடங்கியதால் அதில் கலந்து கொண்டும் விளையாடினார் சாஹல். அந்த ஐபிஎல் போட்டியை காண தனஸ்ரீயும் வந்திருந்தார். அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் எந்த அறிவிப்பும் இல்லாமல் சாஹல் தனஸ்ரீ தம்பதிகள் திருமணம் செய்துள்ளனர். அந்த புகைப்படத்தை தமது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதன் பிறகே ரசிகர்களுக்கு திருமணம் நடந்த விஷயமே தெரிந்துள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டுமே அழைத்து இந்த திருமணத்தை நடத்தியுள்ளனர்.
விராட் கோஹ்லி இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு – ஸ்டீவ் ஸ்மித் கருத்து!!
மேலும் கொரோனா காலத்தில் மக்கள் அதிகம் கூடுவது தடை விதிக்கப்பட்டுள்ளதால் நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்து திருமணத்தை நடத்தியுள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.