விராட் கோஹ்லி இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு – ஸ்டீவ் ஸ்மித் கருத்து!!

0

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது தாயகம் திரும்பியுள்ளார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க சென்றுள்ளது. ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் முடிந்து விட்டது. அதில் இரு அணிகளும் தலா 1 முறை தொடரை வென்றுள்ளனர். தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இந்தியா அணியை 2 வது இன்னிங்சில் 36 ரன்களுள் சுருட்டி தனது வெற்றியை பதிவு செய்தது. தற்போது 2 வது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி அன்று மெல்போர்னில் நடைபெறும். இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி அதில் பங்கேற்க மாட்டார். முதல் போட்டி முடிந்த நிலையில் அவர் தாயகம் திரும்பி உள்ளார். இதை பற்றி ஸ்டீவ் ஸ்மித் பேட்டியளித்துள்ளார்.

இந்தியாவிற்கு பெரும் பின்னடைவு:

இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் அளித்த பேட்டியில் கூறியதாவது “அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால் தனது முதல் குழந்தை பிறப்பிற்காக கோஹ்லி தாயாகம் திரும்பியுள்ளார். இது பாராட்டுக்குரியதே. மேலும் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த உடன் நான் கோஹ்லியிடம் உங்கள் பயணம் சிறப்பாக பாதுகாப்பாக அமையும், மேலும் குழந்தை பிறப்பும் சிறப்பாக முடியும், உங்கள் மனைவிக்கு என் வாழ்த்துக்களை கூறிவிடுங்கள் என்று கூறினேன்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி!!

தற்போது எஞ்சிய 3 போட்டிகளில் விராட் கோஹ்லி விளையாட மாட்டார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். மேலும் முதல் போட்டியில் எதனால் தோல்வி அடைந்தோம் என்று வீரர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும், அப்படி செய்வது நல்ல விஷயமே. மேலும் வீரர்கள் அனைவரும் தனித்திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிட்னி டெஸ்ட் – ஸ்மித் கருத்து:

மேலும் தற்போது சிட்னியில் கொரோனா பரவி வருவதால் 3வது டெஸ்ட் போட்டி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிட்னி டெஸ்ட் போட்டி நடக்க வேண்டும் அங்கு விளையாடுவது எனக்கு பிடிக்கும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ வல்லுனர்களின் கருத்திற்கேற்ப செயல்படுவோம் என்றும் கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் சிவப்பு பந்துக்கு பதில் பிங்க் பந்தே பயன்படுத்தலாமே என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் வார்னே கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு ஸ்மித் மறுப்பு தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சிவப்பு பந்தே சிறந்தது என்று தனது கருத்தை கூறியுள்ளார்.

பாக்ஸிங் டே:

மெல்போர்னில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டி “பாக்ஸிங் டே”என்னும் பாரம்பரிய முறையில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதனால் 2வது டெஸ்ட் போட்டியில் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தயாராக உள்ளனர். மேலும் ‘ரன் மெஷின்’ என்று அழைக்கப்படும் ஸ்மித்துக்கு மெல்போர்ன் ராசியான இடம். இதுவரை அவர் அங்கு 7 டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளார். இதில் 4 சதம் மற்றும் 3 அரைசதம் உட்பட மொத்தம் 908 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here