பாரதியார் பல்கலையில் ஆடு, மாடுகளுடன் குடியேறுவோம் – எம்.பி.நடராஜன் எச்சரிக்கை!!!

0

30 வருடங்களுக்கு முன் பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக பெற்ற நிலத்திற்கான உரிய இழப்பீடு இன்னும் வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பல்கலைக்கழகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்.

முற்றுகை போராட்டம்:

30 வருடங்களுக்கு முன்னதாக பாரதியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக கோவையில் உள்ள விவசாயிகளிடம் ஆயிரம் ஏக்கர் நிலம் பெறப்பட்டது. இதற்கான இழப்பீடு ஏதும் இன்னும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் வழங்குவதாக சொன்ன வேலை வாய்ப்பையும் இன்னும் வழங்கவில்லை. இதற்காக 30 ஆண்டுகளாக விவாசாயிகள் போராடி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த பல்கலைக்கழக பிரச்சனையில் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து வந்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஒரு பகுதி நிதியை விவசாயிகளுக்கு பெற்று கொடுத்தார். அதன் பிறகு எந்த ஒரு நிதியும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பி.ஆர்.நடராஜன், கோவையில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக ஆயிரம் ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் அரசு நிர்ணயித்த விலை குறைவாக இருந்தது என்று அதை அதிகரித்து தர வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதிரடியாக குறைந்து வரும் தங்க விலை!!

இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் அந்த வழக்கை விசாரிக்காமல் இன்று வரை காலம் கடத்தி வருகிறது. விவசாயிகளுக்கு சேர வேண்டிய இழப்பீடு பணத்தையும், விவசாயிகளின் வீட்டில் ஒருவருக்கு பல்கலைக்கழகத்தில் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பும் உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறினார். இல்லையென்றால் தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்ததும் ஆடு, மாடுகளுடன் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குள் குடியேறும் போராட்டத்தை நடத்துவோம் என்றும் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் ஏராளமானோர் பங்கு பெற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here