நட்டநடு காட்டில் விசித்திரமான உடையில் போஸ் கொடுத்த அமலா பால் – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் கலக்கி வருபவர் அமலா பால். தொடர்ந்து சில தினங்களாக வித்தியாசமான உடையில் பல புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் நட்டநடு காட்டில் விசித்திரமான உடையில் போஸ் கொடுத்து ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

அமலா பால்

திரையுலகை பொறுத்தவரை இப்பொழுது வரும் படங்களில் எல்லாம் நடிகர்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களே அதிகம் தரப்படும். ஆனால் தற்போது உள்ள முன்னணி நடிகைகள் பலரும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தான் பெரும்பாலும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் ஒருவர் தான் அமலா பால்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சினிமாவுக்கு நடிக்க வந்த சில நாட்களிலேயே முன்னணி நடிகையாகும் அளவிற்கு அமலா பாலின் வளர்ச்சி இருந்தது. சில நாட்களிலேயே விஜய் உடன் ஜோடி சேர்ந்து நடித்தார். மேலும் தெய்வத்திருமகள் திரைப்படமும் மாஸ் ஹிட் அடித்ததால் அடுத்தடுத்து பல படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

அமலா பாலும் ஏ.எல்.விஜயும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அந்த திருமணம் முறிவில் முடிந்தது. அதன் பிறகு அமலா பால் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போனார். அவர் நடித்த ஆடை திரைப்படமும் பல சர்ச்சைகளை கிளப்பியது. அந்த படத்திற்கு பிறகு அவர் மேல் பல குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டது.

‘விஐபி பையன் செல்வாக்கால தான், சொகுசு பங்களா வாங்கினாங்க’ – சித்ராவின் தோழி திடுக்கிடும் தகவல்!!

இந்நிலையில் ஹிந்தி பாடகர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் செய்திகள் வெளியானது. அவர்களின் லிப்லாக் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆனால் அது ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் அதனை அவர் தவறாக பயன்படுத்துகிறார் என்றும் வழக்குப்பதிவு செய்தார் அமலா பால்.

கடந்த சில தினங்களாக வித்தியாசமான பல போஸ்களில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போதும் ஒரு அடர்ந்த காட்டில் விசித்திரமான உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை எங்கே சென்று எடுக்கிறார் என்பது தான் தெரியவில்லை. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here