Thursday, May 2, 2024

“புரெவி” புயல் மதுரை மாவட்டம் வரை தாக்கத்தை ஏற்படுத்தும் – அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை!!

Must Read

தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்த்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது. அதே போல் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மதுரை மாவட்டம் வரை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமைச்சர் உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.

புதிதான காற்றழுத்த தாழ்வு நிலை:

கடத்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை “நிவர்” புயலாக உருவாகி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை தாக்கியது. இதனை அடுத்து தென் கிழக்கு மற்றும் வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி 10 கிலோமீட்டர் தூரம் வரை நகர்ந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக உருவாகும் என்றும் அதற்கு “புரெவி” என்றும் பெயரிட்டுள்ளனர். இது தற்போது திருகோணமலையில் இருந்து 530 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் இன்று இலங்கையை நோக்கி குமரி கடல் வழியாக நகரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கேரள பகுதிகளில் அதி தீவிரமான கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. புயலினை எதிர்கொள்ள இரு மாநில அரசுகளும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் இன்று மாலை உருவாகும் ‘புரெவி புயல்’ – அதீத கனமழை வெளுத்து வாங்கும்!!

இது குறித்து தமிழக பேரிடர் மேலாண்மை அமைச்சர் உதயகுமார் பேசுகையில், “நாளை கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். நாளை குமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும். அதனால் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும். 24 மணி நேர கட்டுப்பாட்டு மையத்தில் தற்போதைய நிலவரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த புயல் மதுரை மாவட்டம் வரை தாக்கத்தை ஏற்படுத்தும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த கொடுப்பனவும் உயர்வு? DoP&T வெளியிட்ட முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -