வங்கக்கடலில் இன்று மாலை உருவாகும் ‘புரெவி புயல்’ – அதீத கனமழை வெளுத்து வாங்கும்!!

0
cyclone
cyclone

தென்கிழக்கு வங்கக்கடல் & தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும், இதற்கு ‘புரெவி புயல்’ என பெயரிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

‘புரெவி புயல்’

நிவர் புயலால் ஏற்பட்ட தாக்கமே இன்னும் முழுவதும் சரிசெய்யப்படாத நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாய் உள்ளது. இதனால் இன்னும் எத்தனை ஆபத்துகள் நமக்காக இந்த ஆண்டில் காத்திருக்கிறோதோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இருப்பினும் அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நிவர் புயலால் பெருமளவு சேதாரம் ஏற்படவில்லை. குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கிடையில் வங்கக்கடலில் இன்று மாலை ‘புரெவி புயல்’ உருவாக உள்ளது. இது தற்போது காரைக்காலில் இருந்து 975 கிமீ தூரத்தில் நிலைகொண்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (டிச.2) மாலை இலங்கையில் கரையை கடக்கும். இதனால் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

55 முதல் 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here