Thursday, May 2, 2024

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒருமுறை மட்டுமே நீட் இலவச பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன்!!

Must Read

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே நீட் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நீட் தேர்வு முடிவுகள்:

கடத்த செப்டம்பர் மாதம் நீட் தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள 15 லட்சம் மாணவர்கள் எழுதினர். பல எதிர்ப்புகளுக்கு பின் இந்த தேர்வு தேசிய அளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்றது. கடந்த 16 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் மாலை 5 மணி அளவில் வெளியிடப்பட்டன. தேசிய அளவில் இருவர் நீட் தேர்வில் 720/720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலர் முதல் முறையிலேயே வெற்றி அடைந்துள்ளனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அரசு நடத்தும் இலவச நீட் பயிற்சி மையங்களில் படித்த ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாகவும், நீட் தேர்வு பயத்தினை போகும் படியாகவும் உள்ளது. பெற்றோர்கள் மத்தியில் தமிழக பயிற்சி மையங்களின் மீது நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேட்டி:

இப்படியாக இருக்க இது குறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது, “தமிழக அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாக 300க்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்புகள் கிடைக்கும்”

9 மணி நேரம் தோலில் வீரியத்துடன் இருக்கும் கொரோனா – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

“அரசு இலவச பயிற்சி மையங்களில் மாணவர்கள் ஒரு முறை மட்டுமே இலவசமாக பயிற்சி பெற முடியும். அதற்கு பின் அவர்கள் தனி தேர்வு மையங்களில் கட்டணம் செலுத்தி தான் படிக்க வேண்டும். அரசு வழங்கும் இந்த இலவச பயிற்சியினை ஒரு மாணவர் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்” இவ்வாறாக தெரிவித்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

5, 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வந்த புதிய சிக்கல்., டிசி கிடைப்பதில் தாமதம்? கர்நாடகாவில் பரபரப்பு!!!

கர்நாடகாவில் 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு போல, 5, 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என அம்மாநில அரசு மும்முரமாக செயல்பட்டு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -