Friday, April 26, 2024

9 மணி நேரம் தோலில் வீரியத்துடன் இருக்கும் கொரோனா – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

Must Read

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் அதிகமாக பரவி வருகிறது. கொரோனா குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இப்படியான நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரின் தோலில் 9 மணி நேரம் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இந்த நோய் பரவலுக்கு பல காரணங்கள் கூறப்பட்டது. இது ஒருவரிடம் இருந்து எளிதாக பரவக்கூடியது என்று சுகாதார நிபுணர்கள் மக்களை தொடர்ந்து எச்சரித்து வந்தனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இப்படி இருக்க கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் எவ்வளவு நேரம் வரை இருக்கும் என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து கிளினிகல் இன்பெக்டியஸ் டிஸீஸ் பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மக்களை அதிகமாக அச்சுறுத்தும் இன்ப்ளூயன்சா வைரஸுடன் கொரோனா வைரஸினை ஒப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் சராசரியாக மனிதர்களின் தோலில் 9 மணி நேரம் வரை இருக்கும்.

கைகளை கழுவுவது அவசியம்:

ஆனால், இன்ப்ளூயன்சா வைரஸ் 1.8 மணி நேரம் வரை தான் இருக்கும். கொரோனா வைரஸ் இருக்கும் 9 மணி நேரமும் வீரியத்துடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதனை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது நாம் பயன்படுத்தும் சானிடைசர்கள் கொரோனா வைரஸினை அழிக்க வல்லது. காரணம், சானிடைசர்களில் உள்ள எத்தனால் வைரஸ் மீது பட்ட 15 வினாடிகளில் கொரோனா வைரஸ் அழிந்து விடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் – 26 பேர் அதிரடி கைது!!

வெளியிடங்களுக்கு சென்று வந்ததும், அனைவரும் கண்டிப்பாக சோப்பு மற்றும் சானிடைசர்களை பயன்படுத்த மறக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். கைகளை கழுவுவது நம்மை நாமே கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்ளும் சிறந்த வழிமுறையாகும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -